ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வேறு  சேவைக்கு மாற கூடிய போர்ட்டபல் எண் வழங்கப்பட்டு வருவதாக  ஏர்செல் நிறுவன, தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர  நாராயணன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை கடுமையாக  பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஒன்றரை கோடி பேர்  இருந்தனர்.ஆனால் டவர் கிடைக்காத பிரச்சனை எழவே, வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாற தொடங்கினர்.

இதனை தொடர்ந்து முழுவதுமாக,டவர் கிடைக்காத சூழல் நிலவவே, வேறு சேவைக்கு கூட மாற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்,இதனால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள ஏர்செல்  வாடிக்கையாளர்கள்,ஆதார்,வங்கி,காஸ் உள்ளிட்ட பல சேவைகளும்  பாதிக்கப்பட்டு உள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வேறு சேவைக்கு மாற முடியுமா..?

ஏர்செல் சேவையிலிருந்து வேறு சேவையை பெற தேவையான போர்ட் எண்,ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என சங்கர நாராயணன் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக, ஒன்றரை கோடி வாடிக்கையாளராக இருந்து ஒரு  கோடி வாடிக்கையாளர்களாக உள்ளனர்.ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறி உள்ளனர்

மீதமுள்ள ஒரு கோடி வாடிக்கையாளர்கள்,வேறு சேவைக்கு மாற  முயற்சித்து வரும் நிலையில்,ஒரு நாளைக்கு 5 லட்சம்  வாடிக்கையாளர்கள் மட்டும் வேறு சேவைக்கு போர்ட் எண் பெரும் நிலை உள்ளது.

அனைவருக்கும் போர்ட் எண் கிடைக்க மேலும் ஒரு வாரம் ஆகும்  என்றும்,அதற்கான முழுமுதற் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்  தெரிவித்து ஏர்செல்

ரூ.15,000கோடி கடன் இருப்பதால் தான் இந்த சிக்கலை சந்தித்து வருகிறது  ஏர்செல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக,கடந்த சில மாதங்களுக்கு முன்,வட இந்திய 6 மாநிலங்களில் தன்னுடைய சேவையை நிறுத்தியதாக,அதிகாரபூர்வ  தகவலை ட்ராய் வெளியிட்டது என்பது கூடுதல் தகவல்.

குறிப்பு :

வேறு சேவைக்கு மாற போர்ட் எண் ஒரு முறை பெற்றபின், 45 நாட்கள்  வரை கால அவகாசம் உண்டாம் ..

இந்த அனைத்து தகவலையும் ஏர்செல் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்து உள்ளார்.