தூத்துக்குடியில், எம்.ஜி.ஆர்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை கூடுகிறது.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அதிமுக நிறுவனர் - தலைவருமான மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஓட்டல் பிருந்தாவனில் நடைபெறுகிறது.

இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செராஜூ கலந்து கொண்டு பேசுகிறார்.

எனவே, ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.