Asianet News TamilAsianet News Tamil

3 புதிய குற்றவியல் சட்டங்கள் சாமானியர்களுக்கு எதிரானது; அரியலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசு புதிதாக அமல்படுத்தி உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

advocates protest against 3 new criminal law in ariyalur district vel
Author
First Published Jul 1, 2024, 1:29 PM IST

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய  சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜீரோ எஃப்.ஐ.ஆர், ஆன்லைனில் போலீஸ் புகார்களை பதிவு செய்தல், மின்னணு முறைகள் மூலம் சம்மன் அனுப்புதல் மற்றும் விசாரணை கைது உள்ளிட்ட காவல்துறைக்கு அதிக அளவு அதிகாரம் அளித்தல் போன்றவை இச்சட்டத்தின் முக்கிய அம்சமாக மத்திய அரசு கூறினாலும், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவர் என பல தரப்பினருக்கும் இச்சட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.

டீ குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு பலி

இந்நிலையில் இன்று அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். மேலும் இன்று முதல் வருகின்ற ஆறாம் தேதி வரை  வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தினந்தோறும் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவது என தெரிவித்துள்ளனர்.

மாற்று திறனாளிகள், முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியத்தையும் வாரி வழங்கிய ஆந்திரா முதல்வர்

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios