அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தின் இன்று நடக்கிறது. ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட சென்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவோடு இரவாக ‘உடனடியாக சென்னை திரும்புங்கள்’ என்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சொந்த சென்று கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், மீண்டும் சென்னையை விரைந்தனர்.

இதைதொடார்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்