சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 லிருந்து 61 ஆக உயர்ந்துள்ளது. 14 பணியிடங்கள் காலியாக உள்ளது. நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர்நீதிமன்றம் திகழ்ந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 75 நீதிபதிகள் வரை பணியாற்ற முடியும் என்கிற சூழல் நிலவி வருகிறது. இருந்த போதிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது வரை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சேர்த்து 59 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்கறிஞர்கள் கூடுதல் நிதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224(1)-ன்படி குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிடுமொலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகிய இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார். அவர்கள் இருவரும் பணியை ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரின் பெயரை உச்சநீதிமன்றத்தின் கோலிஜியம் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224ன் (I) பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நிடுமோலு மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டு காலம் பதவியில் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 14 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.