கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலை காலமானார்.

தமிழ்த்  திரைப்படங்களில் குணச்சித்திரம்,வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சண்முகசுந்தரம். மிகச்சிறந்த ஒரு நடிகர். 

நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

அத்துடன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.இவரது தங்கை தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம்  இன்று காலை சென்னை மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.