கவிஞர் சினேகன் அவமானப்படுத்தி விட்டார்..! மன்னிப்பு கேட்டே ஆகணும்... நடிகை ஜெயலட்சுமி ஆவேசம்

தான் தனிமையில் அமர்ந்து பேசி நன்கொடை வசூலிப்பதாக கூறும் சினேகன், தன் வீட்டு பெண்களை தனிமையில் அமர வைத்து பேசிதான் வசூலிக்கிறாரா என கேள்வி எழுப்பிய நடிகை ஜெயலட்சுமி, சினேகன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார்.
 

Actor Jayalakshmi says that poet Snehan has humiliated her and therefore needs to apologise

தொண்டு நிறுவனத்தை பயன்படுத்தி பண வசூல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அதில், தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடி நடைபெறுவதாகவும், அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில்  தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவித்த சினேகன். சமீபத்தில் தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்ததாக கூறியிருந்தார். மேலும் இணையதளத்தில் உள்ள பணமோசடி செய்தவரின் முகவரிக்கு விளக்கம் கேட்டு இரண்டு தடவை கடிதம் எழுதிய போது  பதில் வரவில்லையென தெரிவித்தார்.

Actor Jayalakshmi says that poet Snehan has humiliated her and therefore needs to apologise

சினேகன்- ஜெயலட்சுமி புகார்

எனவே சினேகம் பவுண்டேஷன் என குறிப்பிடப்பட்டுள்ள  முகவரியில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டபோது நேரில் சந்திக்குமாறு ஒரு முகவரியை கொடுத்ததாகவும், ஆனால் அந்த முகவரியில் சென்று பார்த்தால் அது பொய்யான இடமென்றும் தெரிய வந்ததாக சினேகன் கூறியிருந்தார். இது தொடர்பாக மறுப்பு தெரிவித்து இருந்த நடிகை ஜெயலட்சுமி,  தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளைக்கு பதிவு எண், நீதிமன்ற அங்கீகாரம் போன்றவை உள்ளதாக தெரிவித்தார். அப்படி இருக்கும் போது நான் ஏன்  மோசடி செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சினேகன் வேண்டுமென்றே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். தான் தனிமையில் அமர்ந்து பேசி நன்கொடை வசூலிப்பதாக கூறும் சினேகன், தன் வீட்டு பெண்களை தனிமையில் அமர வைத்து பேசிதான் வசூலிக்கிறாரா என்றும் விமர்சித்து இருந்தார். 

அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிங்க...! சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி

Actor Jayalakshmi says that poet Snehan has humiliated her and therefore needs to apologise

மன்னிப்பு கேட்க வேண்டும்

ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியான கருத்துகளை பெற்று இருவரும் சமாதானமாக செல்லும் படி அறுவுறுத்தியதாக நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இருந்து போதும் பொதுவெளியில் தன்னைப் பற்றி தவறாக பேசிய சினேகன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்" என நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

இதையும் படியுங்கள்

மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு எண்ணம் தலைதூக்குவது நல்லதல்ல.. முதல்வரே நடவடிக்கை எடுங்க.. பாஜக!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios