அழகான குடும்பத்தை ரசித்து வாழ்வதை விட்டு விட்டு பிரியாணி கடைஊழியரான வஞ்சகன் சுந்தரத்தின் மீது இருந்த மோகத்தால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அன்பான கணவனை கொலை செய்யத் துணிந்த அபிராமி செய்த கொடூர சம்பவத்தால் தமிழகமே கலங்கிப் போனது.
 
8 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்த அபிராமி, தந்து கணவருடன் சந்தோஷமாகவே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த நிலையில் குன்றத்தூரில் பிரியாணி கடை ஊழியருடனான  கள்ளத் தொடர்பால்  திசை மாறிப் போனார். கள்ளக் காதலனின் ப்ளான் படி  தனது இரண்டுக் குழந்தைகளையும் பாலில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தனது கணவனையும் கொள்ளத் துணிந்திருக்கிறார். 

அபிராமி எதிர்பார்த்த நேரத்தில் வராததால் கணவர் விஜய் அபிராமியின் கொலைவெறி வலையிலிருந்து தப்பித்துவிட்டார். சென்னையிலிருந்து தப்பித்துப் போன அபிராமியை பிடித்து வந்து புழலில் தள்ளியது போலிஸ்.

இந்நிலையில், தனது இரண்டு குழந்தைகளையும்  பரிகொடுத்த விஜய்,  ரஜினிகாந்த் ரசிகர். அவரின் இறந்த குழந்தைகளும். ரஜினி போல பேசும், சைகை காமிக்கும், தன தலைவன் ரஜினியை போல பேசவைத்து ரசிப்பாராம் விஜய், கடந்த சில நாட்களாக வீட்டிலேயே குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் இருந்த  விஜயை அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ரஜினிகாந்த்.  ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார். தனது ரசிகர் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லியிருக்கிறார் ரஜினி, தந்து ரசிகன் கதறி அழுததைக் கண்ட ரஜினியும் கண்கலங்கிப்போனார்.

எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. இருந்தாலும், ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார். மீண்டு வாருங்கள் விஜய். ஆண்டவன் துணை இருப்பான்.. வேறென்ன சொல்ல!