தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கையால், ரசிகர்கள் மத்தியில் அதிக வவேற்ப்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து ஓவியா ஆர்மி என்று தொடங்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே ஆரவ்-ஐ ஓவியா காதலிப்பதாக கூறினார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் நடிகை ஓவியா சென்றார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், ஆரவ் - ஓவியா அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர். இது பற்றியும் நாளிதழ்களில் கிசுகிசுக்களும் வெளியானது. 

இந்த நிலையில், ஆரவ்-ம் ஓவியாவும் தாய்லாந்து தலைநகர் பாங்காங் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

ஆரவ் உடன் ஓவியா இணைந்திருக்கும் போட்டோ குறித்து, அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள் என்று அவர்கள் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.