காதலனை கொன்றுவிட்டு காதலியை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்குத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

தேனி மாவட்டம், காட்டூரை சேர்ந்த தங்கநதி மகன் எழில் முதல்வன். இவர் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த கணேசன் மகள் கஸ்தூரியை கல்லூரியில் படிக்கும்போது முதல் காதலித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 2011, மே 14ம் தேதி கஸ்தூரி திடீரென காணமல் போனார். இதனையடுத்து சுருளி அருவி வனப்பகுதியில் ஆண், பெண் இருவரின் உடல்கள், நிர்வாண நிலையில் கிடப்பதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்ததில் அவர்கள் எழில்முதல்வன், கஸ்தூரி என தெரிய வந்தது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்ததில் தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த திவாகரன் (எ) கட்டவெள்ளை இந்த இரட்டைக்கொலையை செய்தது தெரிய 
வந்தது. 

வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியில் இருந்தவர்களை மிரட்டி கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் திவாகரன். அதை காதலன் எழில்முதல்வன் தடுக்கவே காதலி கண்முன் அவரை கொன்றுவிட்டு, கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து திவாகரன் கைது செய்யப்பட்டார். இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்ைம அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமரேசன், குற்றம் உறுதி செய்யப்பட்டதால் இரட்டை கொலைகளை செய்த திவாகரனுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.