Asianet News TamilAsianet News Tamil

திருமண செய்ய சொன்ன பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்த வாலிபர்! தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்! சமையல் செய்யாத மனைவியை வெட்டிய கணவன்...

A young girl who raped a woman who married to marry Brother pregnant Husbands
A young girl who raped a woman who married to marry Brother pregnant Husbands
Author
First Published Feb 7, 2018, 11:23 AM IST


சமையல் செய்யாத மனைவியை வெட்டிய கணவன்...

சமையல் செய்யாததால் ஆத்திரத்தில் மனைவியை வெட்டியதால் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ரேவதி இவர்களுக்கு ஒரே மகா இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

ரேவதி கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு தினமும் காலையில் எழுந்து சமையல் செய்து கொடுப்பது வழக்கம். நேற்று காலை அவருடைய மகள் அவசர அவசரமாக கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

A young girl who raped a woman who married to marry Brother pregnant Husbands

அப்போது தூங்கிக் கொண்டிருந்த ரேவதி அவருக்கு சமையல் செய்து கொடுக்க எழுந்திருக்கவில்லை என தெரிகிறது. மகளுக்கு சமையல் செய்து கொடுக்கும்படி ராஜேந்திரன் மனைவியை எழுப்பினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ரேவதி தூக்கத்தில் இருந்து எழவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் ரேவதியின் முகத்தில் வெட்டினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த உறவினர்கள் ரேவதியை மீட்டு சிகிச்சைக் காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை வெட்டிய ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 வயது அண்ணனால் குழந்தை பெற்றெடுத்த 11 வயது தங்கை!

ஸ்பெயின் நாட்டில் 14 வயது அண்ணனால் 11 வயதான தங்கை குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றோர்கள் ஸ்பெயினின் முர்சியா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சேர்த்த பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதுவரை சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ தெரியாது.

A young girl who raped a woman who married to marry Brother pregnant Husbands

இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமியின் கூடப் பிறந்த அண்ணனே அந்த குழந்தைக்கு தந்தை என்பது தெரியவந்தது அதிர்சியடிதுள்ளது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் வழக்கு பதிவு செய்யவில்லை.

DNA பரிசோதனை செய்ததில்தான் அந்த குழந்தைக்கு தந்தை 14 வயது சகோதரன் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த சிறுவன் தனது சகோதரியுடன் உறவு கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

திருமண செய்ய சொன்ன பெண்ணை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர்!

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 23 வயது இளம் பெண் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஏரியாவில் சுற்றித் திரியும் தினேஷ் என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர், அந்த பெண்ணுடன் பல பார்க், சினிமா தியேட்டர் என சுற்றித் திரிந்திருக்கிறார். இந்த நிலையில், திடிரென அந்த பெண்ணுடன் பேசுவதை தினேஷ் தவிர்த்து வந்துள்ளார். காரணம், தினேஷ்க்கும் வேறு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்ததாக தெரிகிறது.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த தினேஷின் காதலி,அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால்,செய்வதறியாது திகைத்த தினேஷ், காதலியை ஒரு  லாட்ஜில் ரூம் போட்டுவிட்டு அங்கு வரவைத்து அவருக்கு இளநீரில் மயக்க மருந்து கலந்து

கொடுத்துள்ளார். அதை வாங்கி அந்த பெண்ணும் குடித்ததால் மயங்கிய போது அவரை தினேஷ் உல்லாசம் அனுபவித்த தினேஷ், தனது செல்போனின் வீடியோ பதிவிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் என்னை திருமணம் செய்து கொள்ள மிரட்டினால், இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவதாகவும், இளம்பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை நம்பவைத்து கற்பழித்த தினேஷ் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios