கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் பெற்ற மகனையே கிணற்றில் தள்ளி தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள என்.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். தறி தொழிலாளி. இவரது மனைவி மைனாவதி என்ற தைலம்மாள். இவர்களது மூத்த மகன் சசிகுமார்.

கடந்த 5-ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சசிகுமார் திடீரென காணமல் போனான். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் இதனையடுத்து போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது தாய் மைனாவதி எடக்கு முடக்காக பேசி மழுப்பியதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில்  பல்வேறு தகவல்கள் வெளியானது.

தறி தொழிலாளியான மணிகண்டனும், அதே பகுதியை சேர்ந்த தியாகராஜனும், நண்பர்கள். இதனால் மணிகண்டன் வீட்டிற்கு தறி தொழிலாளியான தியாகராஜன் அடிக்கடி வந்து சென்றார். இந்த சமயத்தில் மைனாவதிக்கும், தியாகராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மணிகண்டன் வெளியில் சென்ற நேரத்தில் மைனாவதியும், தியாகராஜனும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

கணவன் வெளியில் சென்றதும் இருவரும் தினமும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் மகன் அடிக்கடி இவர்கள் உல்லாசத்தில் இருக்கும் சமயத்தில் மகன் சசிகுமார் இடைஞ்சலாக இருந்தான். மைனாவதியின் காமம் கண்ணை மறைத்தது. பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை மைனாவதி கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகனை கடந்த 5-ந்தேதி மாலை பிச்சாம்பாளையம் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்ற மைனாவதி. பின்னர் அங்குள்ள கிணற்றில் தள்ளி மகனை கொலை செய்தார்.

பின்னர் ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வந்த மைனாவதி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மாயமானதாக கூறி நாடகமாடியுள்ளார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சசிகுமாரை தள்ளி விட்டு கொன்ற கிணற்றை அடையாளம் காட்டும் வகையில் நேற்று போலீசார் மைனாவதியை அங்கு அழைத்து சென்றனர் ஆனால், அதற்குள் இருட்டி விட்டதால் நேற்று கிணற்றில் இறங்கி தேட முடியவில்லை. இன்று காலை மைனாவதியை அந்த கிணற்று பகுதிக்கு மீண்டும் அழைத்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைத்ததும் 2 பேரையும் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.