Asianet News TamilAsianet News Tamil

மருத்துவமனை இல்லாமல் மக்கள் அவதி..! நிலத்தை தேடி அலைந்த அதிகாரிகள்..! தானமாக வழங்கி அசத்திய தம்பதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க நிலம் தேவைப்பட்ட நிலையில் 1035 சதுர அடி நிலத்தை திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதி தானமாக வழங்கியுள்ளனர். இதனையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அந்த தம்பதியை நேரில் சென்று பாராட்டியுள்ளனர்.
 

A couple from Thiruvannamalai donated land to set up a primary health centre
Author
First Published Nov 28, 2022, 10:14 AM IST

ஆரம்ப சுகாதார மையம்

நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடுத்தர வர்க்க மக்களால் நிலம் வாங்குவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சொந்த வீடு கட்ட வேண்டும் என எண்ணி நிலம் வாங்க செல்பவர்கள் தலை தெரிக்க திரும்பி வந்தவர்களும் உண்டு. அந்த வகையில் சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் வாங்கிய நிலத்தை மக்களுக்கு உதவிடும் வகையில் ஆரம்ப சுகாதார நிலைய அமைக்க ஒரு தம்பதியினர் அரசுக்கு  தானமாக வழங்கிய நிகழ்வு அனைவரும் மத்தியில் ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் உத்தேந்திரம் நகராட்சியில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தால் அந்த பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. எனவே அந்த பகுதி மக்கள் தங்களது நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். 

தவறான பாதையில் பயணிக்கும் திமுக..! தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இலக்கு - அண்ணாமலை உறுதி

A couple from Thiruvannamalai donated land to set up a primary health centre

தானமாக வழங்கிய தம்பதி

இதனையடுத்து தமிழக அரசும் அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடத்தை தேடும் பணியில் தீவிரமாக இருந்தது. இதற்காக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில் பல மாதங்களாக நிலம் தேடி கிடைக்காத நிலையே ஏற்பட்டிருந்தது. இத்தனையடுத்து அன்னபூரணி மற்றும் யோகா ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் தங்களது நிலமான 1,305 சதுர அடி நிலத்தை அரசுக்கு தானமாக வழங்க முடிவு செய்து வழங்கி உள்ளனர். தொடர்பாக ராஜ்குமார் கூறுகையில் தங்களது நிலத்தில் ஆன்மீக மையம் அமைக்க முதலில் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிலத்தை வழங்கி இருப்பதாக தெரிவித்தனர். 

திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா? எதற்கு இவ்வளவு அவசரம்! மது வாங்க அரசு ஆதாரை காட்டாயமாக்கலாமே? மநீம.!

A couple from Thiruvannamalai donated land to set up a primary health centre

சுகாதாரத் துறை அதிகாரிகள் பாராட்டு

இது தொடர்பாக மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி கூறுகையில், நிலத்தை அரசுக்கு தம்பதியினர் தானமாக வழங்கியதால் எதிர்காலத்தில் பலருக்கு உதவும் என தெரிவித்தார். இந்த உதவி காரணமாக சுமார் 1,000 குடும்பங்கள் மருத்துவ நலன்களைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தம்பதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

மூன்று மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்..! என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios