பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்று இரவு அறிவித்தார். இதைதொடர்ந்து பெட்ரோல் பங்க்குகளில், 5 லிட்டர் பெட்ரோல் ரூ.500 விற்பனை செய்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது அறிவித்தது.இதனா, நேற்று இரவே சென்னை முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்த அனைவருமே ரூ.500, ரூ.1000 கொண்டு வந்தனர். பலரிடம் சில்லறை இல்லை. இதனால், பங்க் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருசில பெட்ரோல் பங்க்குகளில் 5 ரூயாய் நோட்டை கொடுத்தால், 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே கொடுக்கிறார்கள். இதுபற்றி கேட்டால், போய் சில்லறை மாற்றி வந்து பெட்ரோல் போட்டு கொள்ளுங்கள் என அடாவடியாக பேசுகிறார்கள்.

திடீரென்று வந்த இந்த அறிவிப்பின் காரணமாக, தெரியாதவர்களும் இங்கு வந்து பெட்ரோல் போட முடியாத சூழல் எழுந்துள்ளது. குறைவான பணம் இருக்கக்கூடிய நிலையில் பெட்ரோல் போடுவதற்கு செல்லும்போது, சில்லறை இல்லை என அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டுள்ளன.