அவிநாசி அருகே ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலையில் நேற்று நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கார், அதை தொடர்ந்து 2 பைக் வநதது. போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர்.
காரில் 3 பேர், 2 பைக்கில் தலா ஒருவர் வந்தனர். அவர்கள் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி செல்வது தெரியவந்தது. அவர்களிடம் உள்ள ஆவணம் குறித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, 2 பண்டல்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்த்து. அதில் 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.35 லட்சத்துக்கும், 100 ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சத்துக்கும் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை காவர் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், கோவையை சேர்ந்த இளையராஜா, ஷாகுல் ஹமீத், அசாருதீன், குல்பர் அலி, ஹாரூன் என தெரியவந்தது. பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
