வேலூர்

காட்பாடி இரயில் நிலையத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு இரயில் மூலம் கடத்த முயன்ற 3 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என்ற தகவல் தாசில்தார் சத்தியமூர்த்திக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பறக்கும் படை தனி தாசில்தார்  சத்தியமூர்த்தி தலைமையில் குழு ஒன்று காட்பாடி இரயில் நிலையம் சென்றனர்.

அங்கு அவர்கள் இரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒன்றாவது நடைமேடையில் திருப்பதி – மைசூர் செல்லும் சாம்ராஜா நகர் இரயிலிலும், நான்காவது நடைமேடையில் இருந்த காவேரி விரைவு இரயிலிலும் சோதனை மேற்கொண்டனர்.

அச்சோதனையின்போது, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற தமிழக ரேசன் அரிசி 3 1/2 டன் பறிமுதல் செய்யப்பட்டது.