27 people have been transferred to DSP and Assistant Commissioners in Tamil Nadu

தமிழகத்தில் டிஎஸ்பிகள் மற்றும் உதவி ஆணையர்கள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.

இதனால் அதிருப்தி அடைந்த கீழ்மட்ட காவலர்கள் உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும் போராட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர்.

ஆனால் உயரதிகார வர்க்கம் கடுமையான சட்டங்களையும் அதிகாரங்களையும் கொண்டு அடக்கியது.

தமிழகத்தில் நிலவும் இந்த அசாதரண சூழ்நிலையில், 19 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 8 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நாராயணன், சூர்யமூர்த்தி, பாஸ்கரன், தங்கவேல், மணி, வேலன், இளங்கோவன், ரமேஷ், சங்கு ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலமுருகன், ஜனார்தனன், அன்பு ராஜ், மணிகண்டன், ஜெயராம், ரமேஷ் கிருஷ்ணன், அனிதா ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.