கடலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

அதன்படி, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் 30 அடி உயரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்தினர். 

இது குறித்த தகவல் அறிந்த காவலாளர்கள் விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 11 பேரை கைது செய்தனர்.

இதேபோல சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் வண்டிகேட் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். 

இது பற்றிய தகவல் அறிந்து வந்த சிதம்பரம் நகர காவலாளர்கள் போராட்டம் நடத்திய முடிவண்ணன் உள்பட 15 பேரை கைது செய்தனர்.