மதுரை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடிய நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் நேற்று நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆட்சியர் அலுவலக வாசலை முற்றுகையிட்டு அங்கே "மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களை காவலாளர்கள் கலைந் து செல்லுமாறு அறிவுறுத்திஹ்யும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பெண்கள் உள்பட 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.