2 tamilnadu people arrested by andrapradesh police
திருப்பதி அருகே செம்மரைகட்டை வெட்டி கடத்தியதாக தமிழர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழர்கள் பெரும்பாலோனோர் ஆந்திராவிற்கு வேலை தேடி செல்வது வாடிக்கையாகி வருகிறது.
அங்கு தமிழர்கள் கூலி வேலைக்கு செல்வதாக கூறி செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு தமிழக வேலையாட்கள் 21 பேரை ஆந்திர போலீசார் சரமாரியாக சுட்டு கொன்றனர்.
அதற்கு காரணம் அவர்கள் செம்மரம் கடத்தியதாகவும் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், ஆந்திர போலீசார் மீது குற்றசாட்டுகள் எழவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் 2 பேரை செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெடியப்பன், தீர்த்தகிரி ஆகியோரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
