2 suicide with mothers Police investigate
குடும்ப தகராறு காரணமாக, பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளுரில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பெருமாள்பட்டு கிராமத்தை சேரந்தவர் சரஸ்வதி. இவருக்கு இலக்கியா, ஸ்ரீஜா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
இன்று காலை, சரஸ்வதி, குழந்தைகளுடன், வேப்பம்பட்டு ரயில் தண்டவாளம் அருகே சென்ற அவர், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சரஸ்வதி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
