Asianet News TamilAsianet News Tamil

சிவகங்கையில் பணிபுரியும் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேறு இடத்திற்கு மாற்றம் – ஆட்சியர் அதிரடி…

19 Regional Development Officers transferred in Sivagangi - collector order
19 Regional Development Officers transferred in Sivagangi - collector order
Author
First Published Jul 13, 2017, 9:27 AM IST


சிவகங்கை

சிவகங்கையில் பணிபுரியும் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி மாற்றபட்டவர்கள் விவரம் வருமாறு:–

சிவகங்கையில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சந்திரா, மானாமதுரை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த அமலோற்பவம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.

திருப்புவனத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ராஜேஸ்வரி, அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கிருந்த ஜஹாங்கீர் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேசிய ஊரக வேலை திட்டப்பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.

தேவகோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த இளங்கோ தாயுமானவர், அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த திருப்பதிராஜன் அங்கேயே வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ஜெயராமன், சிவகங்கையில் உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த சையதுமுகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.

திருப்பத்தூரில் பணிபுரிந்த ஹேமலதா, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த பர்னபாஸ் அந்தோணி, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.

சிங்கம்புணரியில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஆனந்தலட்சுமி, சிவகங்கை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

கண்ணங்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீதர், அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஏற்கனவே அங்கிருந்த ரமேஷ் அங்கேயே வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டனர்.

சிவகங்கை மாவட்ட வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த திருநாவுக்கரசு, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் அலுவலக மேலாளராக பணிபுரிந்த பிரதீப், சிங்கம்புணரி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். விடுப்பு முடிந்து திரும்பி வரும் பாக்கியம் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவில் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஜோசப் அருள்ராஜ், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

விடுப்பு முடிந்து வரும் உமா சிவகங்கை உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலக கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் விடுப்பு முடிந்து வரும் உமாமகேஸ்வரி, திருப்பத்தூர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios