Asianet News TamilAsianet News Tamil

வெடி விபத்தில் 19 பேர் பலி – பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிதியுதவி

19 persons-desd-cm-special-fund
Author
First Published Dec 4, 2016, 11:14 AM IST


வெடிவிபத்தில் பலியான 19 பேரது குடும்பத்தினருக்கு நிதயுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

துறையூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியானார்கள். இது தொடர்பாக, 5 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, முருங்கப்பட்டியில் இயங்கி வந்த வெடி மருந்து தொழிற்சாலையில், கடந்த 1ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சில உடல்கள் மண்ணில் புதைந்து விட்டது.

19 persons-desd-cm-special-fund

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிற்சாலை நிர்வாகிகள் விஜயகண்ணன், பிரகாசம், ராஜகோபால், ராஜமணிகண்டன், கணேஷ், வேங்கடபதி ஆகியோர் மீது, 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகல்லூர் கிராமத்திலும், முருங்கப்பட்டியிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் சமரசம் பேசினர்.

19 persons-desd-cm-special-fund

இந்நிலையில், வெடி விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிதயுதவி வழங்க உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அதில், துறையூர் வெடிவிபத்து உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios