13 feet python lying in the field Forest Department recovered in the forest area ...

கன்னியாகுமரி

கடனாநதி அணை அடிவாரத்தில் உள்ள வயலில் படுத்து கிடந்த 13 நீளமுள்ள மலைப் பாம்பு மீட்டு காட்டுப்பகுதிக்குள் வனத்துறையினர் கொண்டுசென்று விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணை அடிவாரத்தில் கோதர் மைதீன் என்பவர் வயலிலில் சிறு கிழங்கு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, செடிகளுக்குள் மலைபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து, கடையம் வனத்துறையினருக்கு உடனே தகவல் அளித்தார்.

அந்த தகவலை அறிந்த அம்பாசமுத்திரம் முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் பர்கவ் தேஜா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, வனச்சரகர் வெள்ளைத்துரை (பொறுப்பு) அறிவுறுத்தல் வனவர் மோகன், வழிகாட்டுதலில் வனக்காப்பாளர் சுந்ரேசன், வனக்காவலர்கள் முத்துக்குமார், ரமேஷ் பாபு, வேட்டை தடுப்புக் காவலர்கள் வேல்ராஜ், மணிகண்டன், சக்தி முருகன், மாரியப்பன், செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு, செடிகளுக்குள் படுத்துக்கிடந்த 13 அடி நீளமுள்ள மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பை சிவசைலம் பீட் வாளையாறு வனப்பகுதிக்குள் கொண்டுச் சென்று பத்திரமாக விட்டனர்.

வயலிலில் சிறு கிழங்கு செடிகளுக்கு மத்தியில் மலைப்பாம்பு இருக்கும் செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியதால் ஏராளமான மக்கள் வந்து 13 அடி மலைப்பாம்பை பார்த்துச் சென்றனர்.