நாட்டாமை பட பாணியில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 4 குடும்பங்கள்; காலி விழச்சொல்லி கொடுமை படுத்துவதாக புகார்
திருவாரூர் மாவட்டத்தில் சினிபா பாணியில் தக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட அன்னியூர் ஊராட்சியில் உள்ள மாதா கோவில் தெருவைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரது மனைவி பெரலிஸ் மேரி (வயது 70). இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் நான்கு மகள்களுக்கும் திருமணமான நிலையில் 3 மகள் மாதா கோவில் தெருவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஒரு மகள் மட்டும் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.
இதில் பெரலிஸ் மேரியின் மூன்றாவது மகளான ஜெனிதா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஊர் பஞ்சாயத்து தரப்பைச் சேர்ந்த வாசுவிற்கும், ஜெனிதாவிற்கும் ஊர் பஞ்சாயத்தில் முறையிடாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெனிதாவின் கணவர் கணேசன் இது குறித்து வாசுவிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கை எட்டி சாதனை!
இதனையடுத்து கணேசன் இது குறித்து பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜெனிதா மற்றும் அவரது சகோதரி குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த நாட்டாமை ராஜி, ஆல்பர்ட் ராஜா, சுப்பிரமணியன், மாதவன், சந்திரசேகர் ஆகியோர் சசிகலா வீட்டை சூறையாடி தங்கச்சி மகளை தாக்கியதுடன் சுனிதாவின் உறவினரான பெர்னாண்டஸ் வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
இதனிடையே அந்த ஊரில் இருக்க தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஊரில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் கட்டி 10 முறை காலில் விழ வேண்டும் என்று நிர்பபந்திப்பதாகவும் காவல் நிலையத்தில் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.