திருவாரூர் அடுத்த கொரடாச்சேரி அருகே அரசு பேருந்து ஒன்று சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே வெள்ளை மதகு என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, அரசு பேருந்துக்கு எதிரே இரண்டு பொலிரோ வாகனங்கள் அதிகவேகமா வந்ததாக கூறப்படுகிறது. ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு அதிவேகமாக வந்துள்ளது. அதில் வரு கார் அரசு பேருந்து மீது மோதியதில், ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



அலறல் சத்த் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், விபத்தில் காயம் அடைந்த பொது மக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அரசு பேருந்தில் பயணித்த தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ், திருச்சியை சேர்ந்த பிரான்சிஸ், உசிலம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள், கொரடாச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்தியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்புதீன், அவரது மனைவி மதினா, மகள் பரிதா ஆயிஷா பானு, முகமது ரிஸ்வான் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். மேலும் பெருமாளகரம் பகுதியை சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 10 பேர் பலத்த காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக கொரடாச்சேரி காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.