Watch : பெட்ரோல் நிலையத்தில் ரூ.2000 நோட்டு தாள் மாற்ற இயலாது! ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு!
திருவாரூரில் கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தில் 2000 ரூபாய் நோட்டு மாற்ற இயலாது நோட்டிஸ் அடித்து ஒட்டப்பட்டிருப்பதால் ஒரு சில பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
ரிசர்வ் பேங்க் ஆப் கடந்த வாரம், இந்தியா இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், வருகின்ற செப்டெம்பர் 30க்குள் வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து வங்கிகளுக்கும் நேரடியாக பொதுமக்கள் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் தினசரி ரூபாய் 20,000 மட்டுமே வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் இந்த பணம் மாற்றிக் கொள்ளும் பொழுது எந்த ஒரு ஆவணமும் வங்கியில் கேட்கப்பட மாட்டாது என அறிவித்திருந்தது. வங்கி மற்றும் பிற இடங்களிலும் வழக்கம் போல் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்காமல் உள்ளத்தால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான கூட்டுறவு பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் திருவாரூர் நகர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் தினசரி 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பெட்ரோல் டீசல் செலுத்தி வருகின்றனர். தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இயலாது என பெட்ரோல் நிலையம் முன்பு நோட்டிஸ் அடித்து ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் போட வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் பணத்தை வாங்க மறுக்கின்றனர்.
அரசுக்கு சொந்தமான இந்த கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தில் இதுபோன்று நோட்டிஸ் அடித்து 2000 நோட்டுகளை வாங்காமல் இருப்பது மக்களுகிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.