திருவாரூரில் தொடர் கனமழை; 15000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
ஓசூரில் எருது விடும் விழாவிற்கு அனுமதி கோரிய போராட்டத்தில் கலவரம்; போலீசார் குவிப்பு
இந்த நிலையில் இலங்கையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றுள்ளதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் கவலை அடைந்துள்ளனர்.
பழனியில் வேல் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பக்தர்கள் அதிர்ச்சி
தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைப்பனிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 15,000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் கனமழையால் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வேதனை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை செய்யும் நேரத்தில் இந்த மழை பெய்து வருவதால் நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்திக்க கூடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.