குட்காவை பதுக்கி வைத்து கல்லா கட்டிய திமுக கவுன்சிலர்! வீடு புகுந்து தட்டித்தூக்கிய போலீஸ்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
மன்னார்குடியில் 140 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி மூட்டையை அவிழ்த்து சோதனை செய்தனர்.
இதையும் படிங்க;- நைட்டானாவே ஃபுல் மப்பிள் டார்ச்சர்.. அதுக்கு மறுத்த மனைவி.. அடம் பிடித்த கணவர்! மர்ம உறுப்பில் அடித்து கொலை.!
அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டதில் மன்னார்குடியில் உள்ள ஹரித்ராநிதி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் சிவசங்கரிடமிருந்து குட்கா வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனையடுத்து திமுக கவுன்சிலர் சிவசங்கரன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 140 கிலோ குட்கா, பான்மசாலா மற்றும் ரூ. 4 லட்சம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து குட்கா கடத்திய வழக்கில் சிவசங்கர் மற்றும் சேகர் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.