தவறான சிகிச்சை... கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..!

நெல்லையில் ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

fertility center treatment..young woman dead

நெல்லையில் ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

குமரி மாவட்டம் நாகர்கோவில் அத்திகாட்டுவிளை அருகே உள்ள மேலகிருஷ்ணன் கோயில் புதூரை சேர்ந்தவர் சுதன்(29). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவிலைச்ச் சேர்ந்த இந்துராணி(26) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால்,  நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

fertility center treatment..young woman dead

இதனையடுத்து, நீர் கட்டியை அகற்றுவதற்காக மேல் சிகிச்சைக்காக நெல்லை வண்ணாரப்பேட்டையில் தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் நேற்று முன்தினம் இந்துராணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றில் துளையிட்டு அறுவை சிகிச்சை நடந்தது. இதில், அவருக்கு ரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் இந்து ராணி திடீரென உயிரிழந்தார். 

fertility center treatment..young woman dead

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே இந்து ராணி உயிரிழந்துவிட்டதாக கூறி கருத்தரிப்பு மையம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கினால் மட்டுமே இந்துராணியின் உடலை வாங்குவோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்துராணியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios