மகனுக்காக ஊரார் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை.. சினிமாவை விட கொடூரமாக நடந்த நிஜ சம்பவம்..!
பத்தாயிரம் ரூபாயையும் கட்ட என்னிடம் வசதி இல்லை என்று கலைச்செல்வன் கூறியதால் ஊர் பஞ்சாயத்தார் தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், கலைச்செல்வனின் 65 வயதான தந்தை அஞ்சுக் கண்ணு எனது மகனுக்கு பதில் நான் காலில் விழுகிறேன் என்று கூறி தன்னைவிட வயதில் சிறியவரான நாகூர் மீரான் உள்ளிட்ட சிலரது காலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அசுரன் பட பாணியில் மகன் செய்த தவறுக்காக இளைஞர்கள் காலில் விழுந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சனகோட்டகம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது. அப்போது, நடராஜன் மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுகண்ணு மகன் கலைசெல்வனுக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்தில் முறையிடப்பட்டது. பஞ்சாயத்தில் அஞ்சுக்கண்ணு மகன் கலைச்செல்வத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், பத்தாயிரம் ரூபாயையும் கட்ட என்னிடம் வசதி இல்லை என்று கலைச்செல்வன் கூறியதால் ஊர் பஞ்சாயத்தார் தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், கலைச்செல்வனின் 65 வயதான தந்தை அஞ்சுக் கண்ணு எனது மகனுக்கு பதில் நான் காலில் விழுகிறேன் என்று கூறி தன்னைவிட வயதில் சிறியவரான நாகூர் மீரான் உள்ளிட்ட சிலரது காலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில், மனமுடைந்திருந்த அஞ்சுகண்ணு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த அஞ்சுக் கண்ணுவின் மகன் கலைச்செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காலில் விழவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாதாக போலீசார் உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.