வீட்டிற்குள் புகுந்த பாம்பை கையால் பிடித்து விளையாட்டு காட்டிய முதியவர்
வீட்டிற்குள் புகுந்த ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பை அசால்டாக பிடித்து விளையாட்டு காட்டிய முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள மணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவருடன் அவரது அம்மா அண்ணி மற்றும் 6 வயது பெண் குழந்தை ஆகியோர் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனோஜ் மற்றும் அவரது அண்ணி, அம்மா, குழந்தை ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் குழந்தை கொள்ளை புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆறடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று சுவற்றுக்கு அடியில் உள்ள பொந்தில் நுழைந்ததை குழந்தை கவனித்துள்ளது.
இதனையடுத்து குழந்தை ஓடி சென்று தனது அம்மா மற்றும் சித்தப்பாவிடம் இதுகுறித்து கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து மனோஜ் உடனடியாக இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான ராமசாமி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ராமசாமி கடந்த 40 வருடங்களாக சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் புகுந்து அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையில் ஆட்டோ மீது பேருந்து மோதி கோர விபத்து; 5 பேர் படுகாயம்
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த ராமசாமி அந்த பொந்திற்கு அருகில் மண்வெட்டியை வைத்து பொந்தை பெரிதாக்கி விட்டுள்ளார். அப்போது பாம்பு அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கிறது. அப்போது ராமசாமி லாவகமாக பாம்பின் வாலை பிடித்து தூக்கியதுடன் தனது துண்டை வைத்து பாம்புக்கு போக்கு காட்டுகிறார். அப்போது பாம்பு கோபத்தில் படம் எடுத்தபடியும் சீறிய படியும் கொத்துவதற்கு முயற்சிக்கிறது. இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலை தலங்களில் பதிவிட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல்; கடை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
தொடர்ந்து இந்த பாம்பை பத்திரமாக பிடித்து தனது கையிலேயே சுருட்டி எடுத்து சென்று ராமசாமி வனப்பகுதியில் விட்டுள்ளார். 55 வயது முதியவரான ராமசாமி இந்த வயதிலும் ஆறடி நீளம் உள்ள நாகப் பாம்பை அசால்டாக பிடித்து அதற்கு போக்கு காட்டி பாம்பை பத்திரமாக பிடித்த காரணத்தினால் அவரை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.