உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா..பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று தேரோட்டம் நடக்கிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு தோரோட்டம்
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து இன்று காலை முக்கிய விழாவான திருத்தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், அவரை தொடரந்து சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் செல்கின்றனர்.