ஆயிரம் ஆண்டை கடந்த தஞ்சை பெருவுடையாருக்கு இன்று குடமுழக்கு விழா..!!

ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் தஞ்சை ராஜராஜ சோழன் கட்டிய பெருவுடையார் கோயில்  கட்டிடக்கலைக்கு  சான்றாக உலகம் போற்றும் அளவிற்கு பெயர் பெற்று இன்னும் நமக்கெல்லாம் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. பெருவுடையாருக்கு இன்று குடமுழுக்கு விழா. இந்த விழாவினைக்காண லட்சக்கணக்கான மக்களும், வெளிநட்டினரும் கூடியிருக்கிறார்கள். தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Thanjavur Peru Thiruvarur Thousand Year Celebration

 23வருடங்களுக்கு பிறகு இன்று பெருவுடையாருக்கு குடமுழக்கு விழா நடைபெற்று வருகிரது.  8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது.  காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெறும் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றிற்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. முதலில் பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

Thanjavur Peru Thiruvarur Thousand Year Celebration

 குடமுழுக்கைக் காண வந்திருக்கும் பக்தர்களுக்கு தஞ்சையில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கோவில் மதிற்சுவருக்குட்பட்ட வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இவர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இடங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கும்.10 க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இடையூறின்றி குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.யாகசாலை பூஜைகள் தொடங்கியது முதல் இன்று வரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பெரிய கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள இந்த கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

T Balamurukan

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios