கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி... வெளிநாடு தப்பிச்சென்ற குருக்களை விமான நிலையத்தில் அமுக்கிய போலீசார்..!
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை செய்ததில் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த அர்ச்சகர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை செய்ததில் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த அர்ச்சகர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பலரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த கோவிலில் பணிபுரிந்த முன்னாள் குருக்களான ராஜப்பா குருக்களும் இது தொடர்பாக போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். அப்போது, வெளிநாட்டில் ராஜப்பா இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் இந்தியா வந்தால் கைது செய்யும்படி இமிகிரேஷன் அலுவலர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று கனடாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த போது காவல்துறையினர் அவரை கைது தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.