முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த பொன். மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை தமிழ்நாட்டு கோயில்களின் புராதான சிலைகள், கலசங்கள் கடத்தல் வழக்கை விசாரித்து வந்தது. வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முதல், தொழிலதிபர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் பொன். மாணிக்கவேலின் வேட்டை வலையில் சிக்கி கைது செய்து வந்தார். மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட ஏராளமான பழமையான விலை உயர்ந்த கோவில் சிலைகைளை கண்டறிந்து மீட்டு தந்தார். 

இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த நாள அடைப்பை அறுவைச் சிகிச்சை இன்றி சரி செய்ய அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி' என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் உடல்நிலையில் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.