கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் மது பானம் வாங்க வந்த நபர் திடீரென வலிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்தி கீழே விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கும்பகோணம் காசிராமன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், பழைய டைமண்ட் டாக்கிஸ் பின்புறம் செயல்படும் அரசு மதுபான கடையில் இன்று மதியம் மது வாங்க வந்துள்ளார். முருகன் மதுவாங்க வந்தபோது வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் வலிப்பு வந்த நிலையில் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டிருந்த பொழுது ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது இறந்து விட்டதாக தெரிவித்து விட்டு சென்றுவிட்டனர்.

என்.எல்.சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி எச்சரிக்கை

 இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தார், இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இறந்த முருகனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.