பயணிகளை ஏற்றுவதில் தகராறு; அரசுப் பேருந்து நடத்துநரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து நடத்துநரை தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே போட்டி நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளது. அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை வழி மறித்து நிறுத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நாங்க ஜெயிச்சா ரூ.1000 இல்ல ரூ.1,500; திமுகவுக்கு அண்ணாமலை சவால்
அப்போது சமாதானம் படுத்திய அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் விரட்டி சென்று நடுரோட்டில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் இரு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் அரசுப் பேருந்து நடத்துநரை நடு ரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.