உங்கள் சேமிப்பு கணக்கில் ரூ.756 கோடி. . . வங்கியில் இருந்து வந்த தகவலால் திக்கு முக்காடி போன வாடிக்கையாளர்

தஞ்சையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு உங்கள் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு உள்ளதாக குறுந்தகவல் வந்ததால் வங்கியின் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

a private company employee received sms from private bank rs 756 crore deposited in your account in thanjavur vel

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 29). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கணேசன் நேற்று நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு தனது கோட்டாக் மகேந்திரா வங்கி மூலம் ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதற்கான குறுஞ்செய்தியும் அவருக்கு வந்துள்ளது.

குறுஞ்செய்தியில் அவரது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கிக்கு நேரில் சென்று வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

டிடிவி தினகரனையும், அவரது கட்சியையும் நாங்கள் பொருட்படுத்தியதே கிடையாது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் எந்த விளக்கமும் கூறாமல் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தியை மற்றும் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு செல்போன் மூலமாக தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளார். மேற்கொண்டு எந்தவித தகவலும் வராததால் கணேசன் தனது வங்கி இருப்பு நிலையை பரிசோதித்து பார்த்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? அன்புமணி ஆவேசம்

அதில் ரூ.756 கோடி குறித்து எந்தவித தகவலும் இல்லாமல், அவர் எப்பொழுதும் வைத்திருக்கும் வங்கி இருப்பு மட்டும் காட்டியதால் கணேசன் ஏமாற்றம் அடைந்தார். தற்போதைய சூழலில் வங்கிகளில் இருந்து அண்மை காலமாக இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். வங்கிகளில் நடைபெறும் குளறுபடிகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios