உயர் மின்னழுத்த கோபுரங்களால் ஏற்படும்  இந்த மின்காந்த அலைகளால் புற்றுநோய் முதலான பல்வேறு நோய்கள், நீண்டகாலப் பாதிப்புகள் இருக்குமென்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மூணாம்பள்ளி என்ற கிராமத்தில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 400 கிலோவாட் மின்சாரத்தைக் கடத்தும் வல்லமை கொண்டவை. திருப்பூர் மாவட்டம் ராசிப்பாளையத்திலிருந்து பாலவாடிக்கு இப்பகுதி வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், மிங்கோபுரங்கள் தாழ்வாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் மீது உயர் மின்னழுத்தக் கோபுரங்களில் இருந்து பரவும் மின் காந்த அலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்தனர் அப்பகுதி இளைஞர்கள்.

எப்படி கண்டுபிடித்தனர்? உயர் மின்னழுத்தக் கோபுரங்களின் கீழே இரண்டு கைகளிலும் டியூப் லைட்களை ஏந்திக்கொண்டு, அப்பகுதியில் நிற்கும்போது அந்த பகுதியில் பரவியிருக்கும் மின் காந்த அலைகளால் தானாகவே அவை எரியும். இந்த மின்காந்த அலைகளால் என்னென்ன பாதிப்பு என பார்த்தால் புற்றுநோய் நோய் மட்டும்லல, நீண்டகாலப் பாதிப்புகள் இருக்குமென்பதை உலக சுகாதார நிறுவனம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு மூணாம்பள்ளி கிராமத்துக்கு சென்ற ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியிடம் 2 டியூப்லைட்கள் கொடுக்கப்பட்டன. அப்போது அவை தானாகவே ஒளிர்ந்தன. அதுமட்டுமல்ல , அவரது உடலில் மின்சாரம் பாய்கிறதா என்பதைக் கண்டறிய டெஸ்டர் வைத்து சோதனை செய்யப்பட்டபோது, டெஸ்டரும் மினுமினுத்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அப்பகுதியினரிடம் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வாங்கிய கணேசமூர்த்தி. இந்த பிரச்சினையை விளக்கும் வகையில் போட்டோக்களும் எடுத்துகொண்டார்.

அதுமட்டுமல்ல, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாகப் பேசப்போவதாகவும், நாடாளுமன்றத்திலும் பேசப் போவதாகவும்,  அப்பகுதியினரிடம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.