செருப்புக்கு பதில் ஷு... யூடியூப்பில் பாடங்கள்!! தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளி... செங்கோட்டையன் மாஸ் அறிவிப்புகள்...

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும், மாணவர்களுக்கு 'யூ டியூப்' பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 

Sengottaiyan announced for govt school students

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும், மாணவர்களுக்கு 'யூ டியூப்' பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியான பல மாற்றங்களை நிகழ்த்திவரும் அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார்.  இந்தியாவில் முதன்முறையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும், இண்டர்நெட் வசதி என அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்திக்கையில்;  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும். மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios