சத்தியமங்கலம் அருகே தண்ணீர் குடிக்க வந்து கிணற்றில் மாட்டிக்கொண்ட சிறுத்தை மீட்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தண்ணீர் குடிக்க வந்து கிணற்றில் விழுந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் திண்டுகல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி கோவில் அருகே சில அடி தொலைவில் தண்ணீர் இல்லாத சுமார் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு உள்ளது.
நேற்று அதிகாலை அந்த பகுதி இளைஞர்கள் அந்த வழியாக சென்ற போது கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு அருகே சென்று எட்டி பார்த்துள்ளனர். அப்போது கிணற்றிற்குள் சிறுத்தை ஒன்று உறுமியபடி படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே போலீஸ் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் அதிரடி கைது
முதல் கட்டமாக தீயணைப்புதுறையினர் மூலம் ஏணியை கிணற்றில் இறக்கி அதன் வழியாக சிறுத்தை ஏறி காட்டிற்குள் சென்றுவிடும் என முயற்சி செய்யபட்டது. ஆனால் சிறுத்தை அங்கு கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மேலே வராமல உள்ளே சுற்றி திரிந்தது. அடுத்ததாக சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழியை கட்டி இறக்கி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். கூண்டு சிறிதாக இருந்ததால் அதில் சிக்காமல் போக்கு காட்டியது.
மீண்டும் பெரிய கூண்டு வரவழைக்கப்பட்டு கூண்டில் ஆட்டின் இறைச்சி மற்றும உயிருடன் ஆட்டையும் கட்டி கிணற்றில் இறக்கி விட்டு காத்திருந்தனர். இந்த முறை சிறுத்தை ஆட்டை பிடிக்க சென்று கூண்டில் மாட்டிக்கொண்டது. கூண்டை கிரேன் உதவியுடன் கிணற்றில இருந்து வெளியே கொண்டுவந்தனர்.
கோவில் திருவிழாக்களில் பக்தி இல்லை; யார் பலசாலி என்ற போட்டி தான் உள்ளது - நீதிமன்றம் வேதனை
உணவு, தண்ணீர் இன்றி இருந்ததால மிகவும் ஆக்ரோஷமாக சிறுத்தை காணப்பட்டது. சிறுத்தையை பார்க்க ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறும் போது தெங்குமரஹா வனப்பகுதியில் மங்களப்பட்டி என்ற இடத்தில் சிறுத்தை விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.