ஆடி பெருக்கு; தென்னகத்தின் காசியான கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் இன்று புனித நீராடி, இறைவனை வழிபட்டனர்.
ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் இந்துக்களால் ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவதும், முன்னோர்களுக்கு பரிகார வழிபாடுகள் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், நதிகள் சங்கமிக்கும் தலங்களில் தோஷ நிவர்த்தி வழிபாடுகளும் நடத்தப்படும்.
பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குத் தெரியாத அமுத நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு, கூடுதுறை நுழைவாயில் இன்று அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
காதல் திருமணம் செய்த இளைஞர் மீது கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் பெண் வீட்டார் வெறிசெயல்
பக்தர்கள் நீராடும் பகுதி, கிழக்கு வாசல் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர். படித்துறைகளில் காவிரித் தாய்க்கு காய்கள், கனிகள் மற்றும் தானியங்கள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் காவிரித் தாயை வழிபட்டு புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர்.
புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். பரிகார மண்டபங்களில் உயிரிழந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருமணத்தடை நீக்கும் தோஷ நிவர்த்தி வழிபாடுகளில் ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி கூடுதுறையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் தீயணைப்பு படையினர் நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞருடன் நிர்வாண உரையாடல்; இளம் பெண் கதறல் - போலீஸ் வலைவீச்சு
காவிரி ஆற்றில் குளிக்கும் பகுதியை விட்டு பக்தர்கள் ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டது. பவானி போலீசார் 100-க்கும் மேற்பட்டோர், ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கோயிலுக்குச் செல்லும் வழிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவிப்பதைக் தடுக்க காவல் துறையினர் சாதாரண உடைகளில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. கோயில் நிர்வாகம் மூலம் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிரா கொண்டு பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.