பொள்ளாச்சியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் பயணிகள் காயமின்றி தப்பித்தனர். 

கோவை மாவட்டம் வடக்கிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று கொங்குநாட்டன்புதூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் பலத்த காற்றின் காரணமாக பேருந்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று பேருந்தில் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

 

இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் பெயர்ந்துவிழுந்த மேற்கூரையை சரிசெய்ய முயன்று ஓரளவுக்கு சரிசெய்து பேருந்தை பணிமனைக்கு எடுத்து சென்றனர். சரியான பாராமரிப்பு இல்லாத காரணத்தால் மழையில் அரசு பேருந்து ஓட்டுநர் குடை பிடித்துக்கொண்டே ஓட்டி செல்வது, உள்ளிட்ட சம்பவங்கங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு போக்குவரத்துத்துறை காட்டும் அலட்சியமே முதன்மை காரணம் என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.