மக்களே உஷார்.. யூபிஎஸ் பேட்டரி வெடித்து விபத்து.. 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!
கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என 2 மகள்கள் வசித்து வந்தார். இதில், மூத்த மகளான அர்ச்சனா மென்பொறியாளராக உள்ளார். மற்றொரு மகள் அஞ்சலி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
கோவை அருகே ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யூபிஎஸ் பேட்டரி வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டதில் 2 மகள்கள் மற்றும் தாய் விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுபிஎஸ் மின்கசிவு
கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என 2 மகள்கள் வசித்து வந்தார். இதில், மூத்த மகளான அர்ச்சனா மென்பொறியாளராக உள்ளார். மற்றொரு மகள் அஞ்சலி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
3 பேர் பலி
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் இவர்களது வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனே கவுண்டம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த சமையலறையில் தாய் மற்றும் ஒரு மகளும், படுக்கை அறையில் ஒரு மகளும் உயிரிழந்து கிடந்தனர்.
போலீஸ் விளக்கம்
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- வீட்டில் இருந்த யுபிஎஸ் கருவியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டு உள்ளது. இதை அஞ்சலி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அஞ்சலியும், விஜயலட்சுமியும் உயிரிழந்தனர். இதேபோல் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சனாவும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளது தெரியவந்தது.