Asianet News TamilAsianet News Tamil

ஆடு மேய்த்த பழங்குடி இன சிறுவனுக்கு கால்நடை டாக்டர் சீட்... கொண்டாடும் மலைவாழ் கிராம மக்கள்!!

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தது சுண்டப்பூர் கிராமம். தமரைக்கரையில் இருந்து மேற்கில் 28, கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டினுள் இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் ஊராளிகள் என்ற பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

Aboriginal boy veterinary doctor
Author
Erode, First Published Jul 12, 2019, 5:08 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தது சுண்டப்பூர் கிராமம். தமரைக்கரையில் இருந்து மேற்கில் 28, கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டினுள் இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் ஊராளிகள் என்ற பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குழந்தைகள் எல்லோருமே பெற்றோர்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் மேய்க்கச் செல்வது வழக்கம். ஒரு சிலர் காடுகளில் கிழங்குகள் பறிக்க, தேன் எடுக்க என ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று விடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்குப் போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மலைப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் வருவதில்லை.

இவ்வூரைச் சேர்ந்த. விவசாயத் தொழிலாளியான  உடுமுட்டிக்கு 9 ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் என 11, குழந்தைகள். இதில் ஐந்தாவதாக பிறந்த சந்திரனுக்கு 8 வயது ஆகும் வரை ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

மலைப்பகுதியில் உள்ள குழந்தைகள் இப்படி சிறுவயதிலேயே ஆடு மாடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளனர் இதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சுடர் என்ற அமைப்பு, இந்த மலைப்பகுதியில் உள்ள பல ஊர்களில் பள்ளிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதில், சுண்டப்பூரில் உள்ள பள்ளியில் படித்த சந்திரன், ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். படிப்பில் சுட்டியாக இருந்ததால் சுடர் அமைப்பே ஆறாம் வகுப்புக்கு குன்றியம் என்ற ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கும், 10 ஆம் வகுப்புக்குப் பிறகு கோபி மேல்நிலைப் பள்ளிக்கும் சந்திரனைக் கூட்டிக்கொண்டுபோய் சேர்த்துள்ளார்.

கடந்த 2018, மார்ச் மாதம் +2 தேர்வு எழுதிய சந்திரன் மொத்தம் 444 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவர் படிப்புக்குச் சந்திரன் விண்ணப்பித்ததில், பழங்குடியினர் பிரிவில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை சுண்டப்பூர் சென்று சந்திரனைச் சந்தித்து உனக்குக் கால்நடை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது என்ற செய்தியை சொல்லியுள்ளார் சுடர் ஒருங்கிணைப்பாளர் நடராசன்.

ஆனால், சந்திரனின் முகத்தில் எந்த விதமான மகிழ்ச்சியும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு பேசிய சந்திரனின் அப்பா உடுமுட்டி "பையன் இதுவரைக்கும் படுச்சதே போதுங்க சாமி. இனி ஊருக்குள்ளே எதாவது வேலை செஞ்சி பொளச்சுக்கிட்டுங்க. மெட்ராசுக்கு அனுப்பிப் படிக்கவைக்கும் அளவுக்கு எங்கிட்டே வசதியில்லிங்க..." என்று சொல்லியுள்ளார். ஆனால் ஓர் மக்கள் சந்திரனை கொண்டாடி மகிழ்கின்றனர். இருக்காதா பின்னே... மலைப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டும், வளர்ந்த ஒரு குழந்தை கால்நடை மருத்துவராவதென்பது மிகப்பெரிய சாதனை தானே.

Follow Us:
Download App:
  • android
  • ios