Asianet News TamilAsianet News Tamil

திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் கார் மீது கவிழ்ந்த கரும்பு லாரி; 3 பேர் உடல் நசுங்கி பலி

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கார் மீது கரும்பு லாரி கவிழ்ந்து விபத்த விபத்தில் காரில் சென்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

3 persons killed road accident near sathyamangalam hills in erode district vel
Author
First Published Mar 12, 2024, 12:04 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இன்று காலை 7.30 மணி அளவில், 27 வது கொண்டை ஊசி வளைவில் கரும்பு லாரி ஒன்று சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வளைவில் திரும்பும் பொழுது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அருகே வந்த கார் மீது கரும்பு லாரி விழுந்தது. இதனால் காரில் பயணித்த 6 நபர்களும் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போடுவதால் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? குஷ்பு சர்ச்சை பேச்சு

இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில்  ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை பொதுமக்கள் படுகாயங்களுடன் மீட்டனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். கரும்புகளை அகற்றி, மேல் பகுதியை உடைத்து, அதில் சிக்கியிருந்த மற்ற மூன்று பேரை மீட்கும் போது, அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி.! படிக்கட்டில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலி.!

விசாரணையில் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கிணறு கிராமம் மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஆறு பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு ஈஸ்வரன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் பயணித்து வந்துள்ளனர். அப்பொழுது 27வது கொண்டை ஊசி வளைவில்  சத்தியமங்கலம் நோக்கி  வந்த போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளனது. காரில் வந்த சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், சௌந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த மனோகர் ஆகிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios