திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே இருக்கும் கொம்பேரிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் ராதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி அந்த குழந்தை பாட்டி வீட்டில் விளையாடி கொண்டிருந்திருக்கிறது .

அப்போது அந்த வழியாக வந்த ராஜ்குமார் (17 ) என்கிற சிறுவனிடம் , குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டு விடுமாறு குழந்தையின் பாட்டி கூறியிருக்கிறார் . அந்த சிறுவனும் குழந்தையை தனது பைக்கில் வைத்து கூட்டிச் சென்றுள்ளான் .

அங்கன்வாடி மையத்தில் குழந்தையை விடாமல் ஊருக்கு ஒதுக்குபுறமுள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்று நான்கு வயதே நிரம்பிய சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் . வலியால் துடித்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறாள் . பின்னர் குழந்தையின் உடலை அங்கேயே போட்டு விட்டு ராஜ்குமார் தலைமறைவு ஆகி இருக்கிறார் .

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சிறுமி கொடூரமாக இறந்து கிடந்த தகவலை காவல் துறைக்கு பொது மக்கள் தெரிவித்தனர் . போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  அடைக்கப்பட்டார் .

இது சம்பந்தமான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . பரபரப்பான இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை அளித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .