Asianet News TamilAsianet News Tamil

எனக்கு பிரச்சாரம் முக்கியமல்ல! தொகுதி மக்கள் தான் முக்கியம்! மருத்துவமனைக்கு விரைந்த பாமக வேட்பாளர்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெற  உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. கறி வெட்டிக்கொடுப்பது, ஓட்டலில் தோசை சுட்டுக்கொடுப்பது, வடை சுடுவது, டீ போட்டுக்கொடுப்பது என ஆளுங்கட்சி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை விதவிதமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

PMK candidate who stopped midway to collect votes and rushed to the hospital tvk
Author
First Published Apr 4, 2024, 1:30 PM IST

தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வரும் நிலையில் பாமக வேட்பாளர் திலகபாமா திருவிழாவில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெற  உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. கறி வெட்டிக்கொடுப்பது, ஓட்டலில் தோசை சுட்டுக்கொடுப்பது, வடை சுடுவது, டீ போட்டுக்கொடுப்பது என ஆளுங்கட்சி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை விதவிதமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆன்லைனிலும் புதுப்புது விளம்பர யுக்திகளை பயன்படுத்தி இளம் வாக்காளர்களை கவர முயன்று வருகின்றனர். இப்படி வேட்பாளர் தினுசு, தினுசாக வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு இப்படி பொய் சொல்லி ஆதரவு கேட்பது வெட்கக்கேடு! திமுக, காங்கிரஸை விளாசும் பாஜக!

PMK candidate who stopped midway to collect votes and rushed to the hospital tvk

இந்நிலையில் தனது ஊர் மக்கள் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு, வாக்கு சேகரிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு விரைந்த பாமக வேட்பாளர் கவனம் ஈர்த்துள்ளார். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். கடந்த வாரம் முதலே திண்டுக்கல் மக்களவைக்கு உட்பட்ட பட்டி,தொட்டி முதற்கொண்டு தீவிர பம்பரமாய் சுழன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

PMK candidate who stopped midway to collect votes and rushed to the hospital tvk

திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு ஏற்கனவே பரிட்சயமானவர் என்பதால், பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள திண்டுக்கல் தொகுதியில் திலகபாமாவிற்கு ஏற்கனவே பெண் வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று வழக்கம் போல் திலகபாமா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தொப்பம்பட்டி, கீரனூர், தாளையம், வயலூர், மஞ்சநாயக்கன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது திலகபாமா, பெரிய கோட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக பிரசாரத்தை பாதியில் கைவிட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு திடீர் வாந்தி  மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஊர் மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு என் மீது பயம் இருப்பதால் தான் ஆட்டுக்குட்டினு சொல்றாங்க! போற போக்கில் TRB.ராஜாவை சீண்டிய அண்ணாமலை!

PMK candidate who stopped midway to collect votes and rushed to the hospital tvk

அத்துடன் மருத்துவர்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நிலை  குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். மக்களின் வாக்குகளை கவர வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், தனது சொந்த தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் பிரசாரத்தையே பாதியில் கைவிட்ட மருத்துவமனைக்கு ஓடிய பாமக வேட்பாளர் திலகபாமாவின் மனிதநேயம் அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது. அகரம் கிராமத்தில் நடந்த திருவிழாவில் வழங்கப்பட்ட நீர்மோர் மற்றும் தின்பண்டங்களை உட்கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும். உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோரில் தற்போது 28 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios