கேரள மாநிலம் காயாங்குளம் அருகே தேவாலயத்துக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த  இளம் பெண் ஒருவரை அங்குள்ள அலுவலகத்தில் வைத்து பாதிரியார் ஒருவர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பாதிரியார் இன்று கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் மாவேலிக்கரை டயோசிசைச் சேர்ந்த காயாங்குளம் தேவாலயத்தில் பங்குத் தந்தையாக பணியாற்றியவர் ஃபாதர் பினு ஜார்ஜ். இந்த தேவாலயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறை  தீர்த்து வைக்க வேண்டும் என பினு ஜார்ஜிடம் முறையிட்டுள்ளார். மேலும் தான் செய்த செயல்களுக்காக பாவ மன்னிப்பு  வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இதையடுத்து யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை தேவாலயத்துக்கு பினு ஜார்ஜ் வரச் சொல்லியிருக்கிறார். சரி, ஃபாதர் நமது பிரச்சனையை தீர்த்து வைப்பார், பாவங்களை மன்னிப்பார் என்று நம்பி அந்தக் பெண் தேவாலய அலுவலத்துக்கு வந்துள்ளார்.

அப்போது அலுவலக கதவுகளை இழுத்து  மூடிய ஃபாதர் பினு ஜார்ஜ் அந்த இளம் பெண்ணை கதற கதற கற்பழித்துள்ளார். இதையடுத்து அந்த இளம் பெண் காயாங்குளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஃபாதர் பினு ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கற்பழிக்கப்பட்ட அந்த இளம் பெண்  மருத்துவ பரிசோதனைக்காக பத்தனந்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் தொடர்ந்து அடுத்தடுத்து பாதிரியார்கள் இளம் பெண்களை கற்பழித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.